அமைச்சகம் மற்றும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆகியவை தேசிய சுகாதார உரிமை கோரல் இணைப்பகத்தினை (NHCX) தொடங்குகின்றன.
இது காப்பீட்டு நிறுவனங்கள், சுகாதாரத் துறை சேவை வழங்குநர்கள் மற்றும் அரசாங்கக் காப்பீட்டு திட்ட நிர்வாக நிறுவனங்கள் ஆகியவற்றினை ஒன்றிணைக்கும் ஓர் எண்ணிம தளமாகும்.
தற்போது, நாட்டில் மேற்கொள்ளப்படும் சுகாதாரக் காப்பீட்டுக் கோரல்களுக்கான தீர்வுச் செயல்முறை பெரும்பாலும் கைமுறையாகவும் நேர விரயம் கொண்டதாகவும் உள்ளது.
சுகாதார நலம் மற்றும் சுகாதாரக் காப்பீட்டு சூழல் அமைப்பில் உள்ள பல்வேறு பங்கு தாரர்களிடையே உரிமை கோரல்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான நுழைவாயிலாக NHCX செயல்படும்.
அனைத்துச் சுகாதார உரிமை கோரல்களுக்குமான மையப்படுத்தப்பட்ட மையமாக செயல்படுவதால், NHCX மருத்துவமனைகளின் மீதான நிர்வாக ரீதியிலான வேலைப் பளுவினைக் கணிசமாகக் குறைக்கும்.