TNPSC Thervupettagam

தேசிய சுகாதார திட்ட அறிக்கை

June 28 , 2018 2216 days 694 0
  • தேசிய சுகாதார திட்டத்தின் பொதுவான ஆய்வுப் பணியின் 11-வது அறிக்கையின் படி, குடும்பக் கட்டுப்பாட்டில் சீரற்ற சுமை தாங்குபவர்களாக பெண்கள் உள்ளனர். நாட்டில் 93 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் கருத்தடை செய்யப்பட்டவர்களாக உள்ளனர்.
  • 2017-18ஆம் ஆண்டில் (அக்டோபர் வரை) மொத்த கருத்தடைகளின் எண்ணிக்கையானது 14,73,418 ஆகும். இவற்றில் பெண்கள் கருத்தடைகள் (Tubectomiel) 93.1% மற்றும் ஆண்கள் கருத்தடைகள் (Vasectomy) 6.8% ஆகும்.
  • இந்த அறிக்கையானது சமீபத்திய சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் (HMIS - Health Management Information System) அடிப்படையில் வெளியிடப்பட்டது. தேசிய சுகாதார திட்டத்தின் கருத்தடை உள்ளிட்ட பல்வேறு அளவுருக்கள் தொடர்பான தகவல்களை மாநிலங்கள் HMIS-ல் பதிவேற்றம் செய்யும்.
  • நாட்டில் முந்தைய வருடங்களில் பெண்களின் கருத்தடைகள் 98% ஆக இருந்தது. அவற்றுடன் ஒப்பிடுகையில் சமீபத்திய ஆய்வு குறுகிய முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
  • பொதுவான ஆய்வுப் பணி (CRM-Common Review Mission) என்பது தேசிய சுகாதார திட்டத்தின் வெளிப் பரிணாமம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்