தேசிய டிஜிட்டல் தொலைத்தொடர்புக் கொள்கை 2018 – வரைவுப் பதிப்பு
May 6 , 2018 2398 days 816 0
ஒவ்வொரு குடிமக்களுக்கும் 50 Mbps அளவிலான அகலக் கற்றையின் (Broad band) அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு தேசிய டிஜிட்டல் தொலைத் தொடர்புக் கொள்கை 2018 எனும் புதிய தொலைத் தொடர்புக் கொள்கைக்கான வரைவை வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையானது, 2020ல் இந்தத்துறையில் 100 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்ப்பதோடு 40 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
உலகளாவிய அலைக்கற்றை பரவெல்லையை ஏற்படுத்தித் தரும் இந்த கொள்கையானது டிஜிட்டல் தொலைத்தொடர்புத் துறையில் கூடுதலாக 4 மில்லியன் பணிகளை ஏற்படுத்துதல், 2017-ல் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பான 6%-ஐ 8% ஆக உயர்த்துதல், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுக்கான இந்தியாவின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் இறையாண்மையை உறுதி செய்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறது.
இந்தக் கொள்கை, 2017 ஆம் ஆண்டில் செய்தி தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் குறியீட்டில் 134-வது இடத்திலிருந்த இந்தியாவை முதல் 50 இடங்களுக்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் செயல்முறைகள், தொடர்புடையனவாய், வெளிப்படையுடையனவாய், பொறுப்புடைமையுடையனவாய் மற்றும் முன்னோக்கிய பார்வையுடையனவாய் தொடர்வதை உறுதிசெய்ய ஒழுங்குமுறை சீரமைப்புகளை (Regulatory Reforms) மேற்கொள்வதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதலீடுகள், புத்தாக்கம் மற்றும் நுகர்வோர் நலன் ஆகியவற்றை பாதிக்கும் ஒழுங்குமுறை தடைகளை நீக்குதல், மற்றும் ஒழுங்குமுறை சுமைகளை குறைத்தல் போன்றவற்றையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வணிகம் செய்தலை எளிதாக்குதலை மேம்படுத்துவதற்காக நிறுவனங்களின் உரிமக் கட்டணங்களை மறுமதிப்பாய்வு செய்தல், நிறமாலை பயன்பாட்டிற்கான கட்டணங்கள், உலகளாவிய சேவை கடமை நிதிகள் ஆகியவற்றை வசூலித்தல் மூலமாக கடனால் ஸ்தம்பித்திருக்கும் தொலைத் தொடர்புத் துறைகளின் பிரச்சினைகளை குறியிட்டுக் காட்டுவதற்கும் இந்த வரைவுக் கொள்கை முன்மொழிகிறது.
டிஜிட்டல் தொலைத் தொடர்புகளுக்கான உபகரணங்களின், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகள் ஆகியவற்றின் மீதான வரிகள் மற்றும் வரிவிதிப்புகளை திறனான முறையில் முறைப்படுத்துவதற்கும் (Rationalize) இந்த வரைவுக் கொள்கை முன்மொழிகிறது.