சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட தேசிய டெங்கு தினமானது வருடந்தோறும் மே 16 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
வைரஸ் நோயான டெங்கு மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்தியாவில் தொற்றுயிரிகளால் பரவும் நோய்த் தடுப்புத் திட்டத்திற்கான தேசிய இயக்குநரகமானது டெங்குவின் கண்காணிப்பு மற்றும் தடுப்பிற்கான முதன்மை மையமாகும்.
2016 ஆம் ஆண்டில் இந்திய அரசானது “India Fights Dengue” எனும் கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது.
2017 ஆம் ஆண்டில் அதிகபட்சமான டெங்கு காய்ச்சல் தொற்றானது தமிழ்நாட்டிலிருந்துப் பதிவு செய்யப்பட்டது.
டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் எஜிப்தி (லின்னேயஸ்) எனும் பெண் கொசுவால் ஏற்படும் கொசுக் கடியால் பரப்பப் படுகின்ற 1 – 4 இரத்த நுண்ணுயிரிவகை DENV எனும் டெங்கு வைரஸால் ஏற்படுகின்றது.