2019 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று இந்தியா தேசிய தடுப்பூசி தினத்தை அனுசரித்தது. இத்தினமானது தேசிய நோய்த் தடுப்பு தினம் (National Immunization Day - NID) என்றும் அழைக்கப்படுகிறது.
தேசிய தடுப்பூசி தினத்தின் கடைபிடிப்பானது உலகிலிருந்து போலியோ நோயை ஒழித்தலுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில், பத்து இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.
பின்புலம்
போலியோ நோய் தடுப்புத் திட்டம் தொடங்கப்படுவதைக் குறிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தேசிய நோய்த் தடுப்பு தினத்தை இந்தியா அனுசரிக்கிறது.
தொடக்கத்தில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 அன்று தேசிய தடுப்பூசி தினத்தை அனுசரித்தது.
தேசிய நோய்த் தடுப்பு தினமானது 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று முதன்முதலாக வாய் வழியாக நோய்த் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட போது முதன்முறையாகக் கடைபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று போலியோ நோய் கடைசியாகப் பதிவு செய்யப்பட்டது.