தேசிய திறன் வளர்ச்சிக் கழகத்துடன் எல்லைப் பாதுகாப்புப்படை புரிந்துணர்வு ஒப்பந்தம்
August 2 , 2017 2802 days 1142 0
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக, தேசிய திறன் வளர்ச்சிக் கழகமானது, எல்லைப் பாதுகாப்பு படையில் (Border Security Force - BSF) இருந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறக்கூடிய பணியாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கவுள்ளது. மேலும் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வருமானம் பெறத்தக்க வகையிலான வேலை வாய்ப்பினை வழங்கும் விதமாக திறன் பயிற்சி வழங்குவது ஆகும்.
இந்தத் திட்டம் ஆனது ஏப்ரல் 2017 முதல் ஏப்ரல் 2022 வரையிலான 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.