TNPSC Thervupettagam

தேசிய தூய்மை காற்றுத் திட்டம்

January 12 , 2019 2145 days 1728 0
  • சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது, தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தை (NCAP - National Clean Air Programme) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் அதிகரித்துவரும் மாசுபாடுகளினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சங்கள் பின்வருமாறு
    • இது 2017-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, 2024-ஆம் ஆண்டில் துகள்மப் பொருள் 10 (PM 10) மற்றும் துகள்மப் பொருள் 2.5 ஆகியவற்றின் அளவுகளை 20 - 30% என்ற அளவிற்கு குறைத்தல் என்ற தோராயமான இலக்குடன் கூடிய ஒரு 5 ஆண்டு செயல் திட்டமாகும்.
    • இத்திட்டமானது, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள காற்று மாசுபடுதலில் மிகவும் மோசமான நிலையில் உள்ள 102 நகரங்களை உள்ளடக்கியதாகும்.
    • இந்நகரங்கள் 2011 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சுற்றுப்புற காற்றின் தரம் குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் (CPCB - Central Pollution Control Board) அடையாளம் காணப்பட்டுள்ளன.
    • இது ஒரு சட்டரீதியிலான ஆவணம் இல்லை என்பதால் இந்த செயல் திட்ட ஆவணம் மாநிலங்களைக் கட்டுப்படுத்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்