சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது, தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தை (NCAP - National Clean Air Programme) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் அதிகரித்துவரும் மாசுபாடுகளினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சங்கள் பின்வருமாறு
இது 2017-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, 2024-ஆம் ஆண்டில் துகள்மப் பொருள் 10 (PM 10) மற்றும் துகள்மப் பொருள் 2.5 ஆகியவற்றின் அளவுகளை 20 - 30% என்ற அளவிற்கு குறைத்தல் என்ற தோராயமான இலக்குடன் கூடிய ஒரு 5 ஆண்டு செயல் திட்டமாகும்.
இத்திட்டமானது, 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள காற்று மாசுபடுதலில் மிகவும் மோசமான நிலையில் உள்ள 102 நகரங்களை உள்ளடக்கியதாகும்.
இந்நகரங்கள் 2011 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சுற்றுப்புற காற்றின் தரம் குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் (CPCB - Central Pollution Control Board) அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது ஒரு சட்டரீதியிலான ஆவணம் இல்லை என்பதால் இந்த செயல் திட்ட ஆவணம் மாநிலங்களைக் கட்டுப்படுத்தாது.