பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை மதிப்பீடு செய்வதற்காக தேசிய தேர்தல் உருமாற்ற கைபேசி செயலியை (NETA – National Electoral Transformation) முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார்.
27 வயதுடைய தொழில்முனைவோரான பிராத்தம் மிட்டலின் சிந்தனையில் உருவான ‘NETA – உறுப்பினர்களின் அறிக்கை அட்டையாகும்’. இந்தத் தளத்தின் மூலம் வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களை மதிப்பீடு மற்றும் திறனாய்வு செய்ய முடியும்.
இந்தச் செயலியானது முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராஜஸ்தானின் அஜ்மீர் மற்றும் ஆல்வார் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டது.