ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மே 11-ஆம் தேதி அன்று தேசிய தொழிற்நுட்ப தினம் (National Technology Day) கொண்டாடப்படுகின்றது.
பல்வேறு துறைகளில் தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவின் தொழிற்நுட்பவியல் முன்னேற்றங்களை (India’s technological advancements) குறிப்பதற்காகவும் தேசிய தொழிற்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்கான இந்திய தொழிற்நுட்ப அதிகாரப்பூர்வ கருப்பொருள்- “நீடித்த எதிர்காலத்திற்காக அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம்” (Science and Technology for a Sustainable Future).
இந்த தினமானது, இந்தியாவால் நடத்தப்பட்ட ஐந்து அணு சோதனைகளில் முதலாவது சோதனையான ஷக்தி நடவடிக்கை (Operation Shakthi -பொக்ரான் – II) மேற்கொள்ளப்பட்ட தினத்தை கொண்டாடுவதற்காக நினைவு கூரப்படுகிறது.
மேலும், இந்தியா மே 11, 1998 அன்று திரிசூல் ஏவுகணையையும் வெற்றிகரமாக சோதனை செய்தது.
இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வானூர்தியான ஹன்சா 3-யையும் இந்தியா மே 11, 1998 அன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.