1998 ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் பொக்ரானில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சக்தி எனப்படும் வெற்றிகரமான அணுகுண்டுச் சோதனையை இந்த நாள் குறிக்கிறது.
நாட்டின் மேம்பாட்டிற்காக வேண்டிப் பங்களிப்பு செய்த அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களைக் கௌரவிப்பதற்கான வாய்ப்பாக இந்த நாள் விளங்குகிறது.
பொக்ரான்-II சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து, 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியை தேசியத் தொழில்நுட்ப தினமாக அரசாங்கம் அறிவித்தது.
முதல் அணுகுண்டுச் சோதனையானது 1974 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடத்தப்பட்டது.
1998 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் ஆறாவது அணுசக்தி கொண்ட நாடாக மாறியது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, 'பள்ளி முதல் புத்தொழில் நிறுவனங்கள் வரை புத்தாக்கம் படைப்பதற்காக இளம் திறன்களைத் தூண்டுதல்' என்பதாகும்.