தேசிய நகர்ப்புற வீட்டுவசதி நிதியம் (National Urban Housing Fund - NUHF)
February 28 , 2018 2464 days 746 0
மத்திய அமைச்சரவை , பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக 60,000 கோடி மதிப்பிலான தேசிய நகர்ப்புற வீட்டு வசதி நிதியத்தை (National Urban Housing Fund - NHUF) ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டமானது 2022-க்குள்2 கோடி வீடுகள் கட்டி முடிப்பதை நோக்கமாகக் கொண்டது.
NUHF ஆனது மூலப்பொருட்கள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தின் (Building materials and Technology Promotion Council - BMTP) கீழ் செயல்படும்.
NUHF ஆனது அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தேவையான நிதி வசதியை ஏற்படுத்தித் தரும்.
வெவ்வேறு வகையில் மத்திய நிதியுதவி தேவைப்படும் நிலைகள்
கூட்டு முயற்சியில் மலிவு விலை வீடுகள் (Affordable Housing in Partnership - AHP)
பயனாளிகள் இணைக்கப்பட்ட கட்டுமானம் (Beneficiary Linked Construction)
குடிசை மறுசீரமைப்பு (Insitu Slum Redevelopment)
மானியத்துடன் கடனளிப்புத் திட்டங்கள் (Credit Linked Subsidy Schemes)
இதன் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள வீடுள்ளவர்கள் மற்றும் வீடற்றவர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள இடைவெளியை, இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படுவதன் மூலம் படிப்படியாகக் குறைக்கலாம்.
மூலப்பொருள் உற்பத்தி மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டுக் கழகமானது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இந்த அமைப்பானது சங்கங்கள் பதிவுச்சட்டம் (Societies Registration Act), 1860 –ன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனுடைய முக்கியமான பணி, புதிய கட்டுமானத் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துவதேயாகும்.