TNPSC Thervupettagam

தேசிய நதிப் போக்குவரத்து மற்றும் வழிசெலுத்தல் அமைப்பு

January 17 , 2025 6 days 61 0
  • உள்நாட்டு நீர்வழி மேம்பாட்டுச் சபையின் இரண்டாவது கூட்டம் ஆனது இந்திய உள் நாட்டு நீர்வழி ஆணையத்தினால் (IWAI) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த நிகழ்வின் போது, ​​தேசிய நதிப் போக்குவரத்து மற்றும் வழிசெலுத்தல் அமைப்பு (NRT&NS) ஆனது தொடங்கப்பட்டது.
  • உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீடித்த நிலைத் தன்மையை நவீனமயமாக்குவதையும் மேம்படுத்துவதையும் இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் தேசிய நீர்வழிகளில் வழிசெலுத்தலை மேம்படுத்த இது நிகழ்நேரத் தரவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • இந்தியாவில் 14,500 கிலோ மீட்டர் தொலைவிலான பரந்த நீர்வழிப் போக்குவரத்து வலையமைப்பு உள்ளது என்ற நிலையில் இதில் சுமார் 111 அறிவிக்கப்பட்ட தேசிய நீர்வழிகளும் (NWs) அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்