TNPSC Thervupettagam

தேசிய நிதி அறிக்கை ஆணையம்

December 16 , 2019 1679 days 666 0
  • தேசிய நிதி அறிக்கை ஆணையமானது (National Financial Reporting Authority - NFRA) 2017-18 ஆம் ஆண்டிற்கான IL & FS நிதியியல் சேவை நிறுவனத்தின் மீதான தனது முதல் தணிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கை இதுவாகும்.
  • NFRAக்கு முன்னதாக, IL & FS நிதியியல் சேவை நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையானது டெலாய்ட் ஹாஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ் (Deloitte Haskins and Sells - DHS) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப் பட்டது.

NFRA பற்றி

  • NFRA அமைப்பானது கணக்கியல் மற்றும் தணிக்கைத் தரங்களை நிறுவுதல் & அமல்படுத்துதல் மற்றும் தணிக்கையாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு அமைப்பு ஆகும்.
  • இது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • NFRA நிறுவப்பட்டதன் காரணமாக, இந்தியா இப்போது சுயாதீன தணிக்கை கட்டுப்பாட்டாளர்களின் சர்வதேச மன்றத்தில் ஒரு உறுப்பினராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்