TNPSC Thervupettagam

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் புதிய கிளைகள்

March 11 , 2019 1958 days 584 0
  • தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் இரண்டு புதிய கிளைகளை ஏற்படுத்திட அரசு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
  • ஒன்று ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியிலும் மற்றொன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரிலும் ஏற்படுத்தப்படும்.
  • இந்த நடவடிக்கை நொடித்துப் போதல் மற்றும் திவால் விதிமுறை 2016 என்ற விதிமுறையின் கீழ் அதிகரித்து வரும் வழக்குச் சுமைகளின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
  • இந்திய நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை இந்தியாவில் தீர்த்திட உதவுகின்ற ஒரு பகுதி நீதித்துறை அமைப்பே இந்த தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயமாகும்.
  • இது 2013 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது. இது 2016 ஆம் ஆண்டு ஜுன் 01-ம் தேதி அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்