TNPSC Thervupettagam

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு தரவரிசையில் தமிழ்நாட்டின் சிறந்த கல்லூரிகள்

June 9 , 2023 537 days 297 0
  • தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு தரவரிசையில் (NIRF) முதல் 100 பல்கலைக் கழகங்களில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 22 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்று உள்ளன.
  • இந்த ஆண்டுக்கான NIRF பட்டியலில் முதல் 100 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முப்பத்தைந்து கல்லூரிகள் இடம் பெற்றுள்ள நிலையில், இது கடந்த ஆண்டை விட மூன்று அதிகம் ஆகும்.
  • இந்த ஆண்டுக்கான ஒட்டு மொத்தப் பிரிவில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் 15வது இடத்தையும், வேலூர் தொழில்நுட்பக் கழகம் (VIT) 17வது இடத்தையும்  பெற்றுள்ளது.
  • அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டு மொத்தப் பிரிவில் 18வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • திருச்சியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கழகம் 21வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டின் சுமார் 20 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இடங்களைப் பெற்றுள்ளன.
  • பல்கலைக்கழகப் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் 24வது இடத்தையும் பெற்றுள்ளது.
  • பல்கலைக் கழகத் தரவரிசையில் 2022 ஆம் ஆண்டில்  39வது  இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் தரவரிசை 2023 ஆம் ஆண்டில் 50வது இடமாக ஆகக் குறைந்துள்ளது.
  • ஆனால் கடந்த ஆண்டு 70வது இடத்தில் இருந்த இதன் ஒட்டு மொத்தத் தர நிலை என்பது இந்த ஆண்டு 63 ஆக முன்னேறியுள்ளது.
  • இந்த ஆண்டுக்கான பல்கலைக் கழகப் பிரிவில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் ஏழாவது இடத்தையும், வேலூர் தொழில்நுட்பக் கழகம் எட்டாவது இடத்தையும்  பெற்றுள்ளன.
  • இந்த ஆண்டுக்கான கல்லூரிகளின் தரவரிசையில் மாநிலக் கல்லூரி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • முதல் 100 கல்லூரிகளின் தரவரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 35 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்