TNPSC Thervupettagam

தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) 2023

June 8 , 2023 411 days 238 0
  • தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கானத் தரவரிசையை  வெளியிட்டுள்ளது.
  • சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம் (IIT) ஆனது  தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒட்டு மொத்தத் தரவரிசையில் ஒரு சிறந்தக் கல்வி நிறுவனமாக உள்ளது.
  • பெங்களூருரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது (IISC) தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நாட்டின் மிக சிறந்தப் பல்கலைக்கழகமாக தரவரிசைப் படுத்தப் பட்டு உள்ளது.
  • டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் சிறந்தக் கல்லூரியாகத் தேர்ந்து எடுக்கப் பட்டு உள்ளது.
  • அகமதாபாத் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி கழகம் (IIM) ஆனது நாட்டின் சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • மருந்தாளுனர் பிரிவில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER) ஆனது  முதலிடத்தைப்  பிடித்துள்ளது.
  • டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமானது (AIIMS) சிறந்த மருத்துவக் கல்லூரியாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • சென்னையிலுள்ள சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் மற்றும் டெக்னிக்கல் சயின்சஸ் நிறுவனமானது பல் மருத்துவக் கல்லூரிகளில் முதலிடத்தில் உள்ளது.
  • பெங்களூருரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியப் பல்கலைக் கழகமானது நாட்டிலேயே சிறந்த சட்டக் கல்லூரியாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • பெங்களூரில் உள்ள  இந்திய அறிவியல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் (JNU) மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறந்த பல்கலைக்கழகங்களாக உள்ளன.
  • புது தில்லி உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமானது விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.
  • ஐஐடி-கான்பூர் ‘புதுமை/புத்தாக்கம்’ என்ற பிரிவில் முதலிடம் பிடித்து உள்ளது.
  • ஐஐஎஸ்சி-பெங்களூரு மற்றும் ஐஐடி-டெல்லி ஆகியவை ஒட்டு மொத்தப் பிரிவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறந்த கல்வி நிறுவனங்களாக இடம் பெற்றுள்ளன.
  • இதில் தில்லி இந்துக் கல்லூரியும் மற்றும் சென்னையின் மாநிலக் கல்லூரியும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறந்த கல்லூரிகளாக இடம் பெற்றுள்ளன.
  • ஐஐஎம்-பெங்களூர் மற்றும் ஐஐஎம்-கோழிக்கோடு ஆகியன முறையே மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்து உள்ளன.
  • சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுகலை நிறுவனம், மற்றும் வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி ஆகியவை இதில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறந்த மருத்துவக் கல்லூரிகளாக தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்