நில அளவை வரலாற்றில் இந்தத் தினமானது முக்கியமான தினமாக விளங்குகின்றது.
இத்தினத்தில் மேஜர் வில்லியம் லம்ப்டோன் என்பவர் 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியன்று சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் மலையிலிருந்து இமயமலை வரையிலான சிறந்த வளைவைக் கணக்கிடுவதற்கான பணியான GTS (மிகப்பெரும் முக்கோணவியல் ஆய்வு) என்ற ஒரு ஆய்வைத் தொடங்கினார்.
GTS (Great Trigonometrical Survey) என்பது அறிவியல் பூர்வ அணுகுமுறையுடன் இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் அளவிடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.
இந்தியக் கள ஆய்வு நிறுவனம் என்பது இந்தியாவில் வரைபடமிடல் மற்றும் வரைபட ஆய்வை மேற்கொள்ளும் ஒரு மத்தியப் பொறியியல் நிறுவனமாகும்.
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலப் பகுதிகளை ஒருங்கிணைப்பதற்கு உதவுவதற்காக 1767 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது இந்திய அரசின் பழமையான பொறியியல் துறைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
இதன் தலைமையகம் டேராடூனில் அமைந்துள்ளது.
இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படுகின்றது.
இந்த நிறுவனத்தின் முழக்கம், “தேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாம் அறிவோம் ஏனெனில் தேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாம் அளந்துள்ளோம்” என்பதாகும்.