TNPSC Thervupettagam

தேசிய நீர்த் திட்ட விருதுகள் -2019

September 27 , 2019 1759 days 596 0
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்திற்கான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் 2019 ஆம் ஆண்டின் தேசிய நீர்த் திட்ட விருதுகளை வழங்கினார்.
  • தேசிய நீர்த் திட்ட விருதுகள்’ என்பது தேசிய நீர்த் திட்டம் (NWM - National Water Mission), நீர் வளத் துறை, நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு, ஜல் சக்தித் துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒரு முயற்சியாகும்.
  • இந்த விருதானது நீர்ப் பாதுகாப்பு, திறனுள்ள நீர்ப் பயன்பாடு மற்றும் நிலையான நீர் மேலாண்மை நடைமுறைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
NWM பற்றி
  • NWM என்பது காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் (NAPCC - National Action Plan on Climate Change) கீழ் உள்ள 8 திட்டங்களில் ஒன்றாகும்.
    • நோக்கங்கள்
    • நீர்ப் பாதுகாப்பு
    • நீர் வீணாவதைக் குறைத்தல்
    • ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் மாநிலங்களுக்குள்ளும் மாநில எல்லைகளிலும் சமச்சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்தல்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்