TNPSC Thervupettagam

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் – டிசம்பர் 24

December 30 , 2023 203 days 234 0
  • 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 24 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
  • இந்த நிகழ்வினை நினைவு கூரும் விதமாக இந்த நாளில் இந்த தேசிய நுகர்வோர் உரிமைகள் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • குறைபாடுள்ள பொருட்கள், அலட்சியமான சேவைகள் (கடமை மீறல்) மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
  • பாதுகாப்பு உரிமை, தேர்வு செய்யும் உரிமை, தகவல் பெறும் உரிமை, வழக்கினைக் கருத்தில் கொள்ளும் உரிமை, தீர்வு கோரும் உரிமை மற்றும் நுகர்வோர் கல்விக்கான உரிமை ஆகியவை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் ஆறு அடிப்படை உரிமைகள் ஆகும்.
  • உலக நுகர்வோர் உரிமைகள் தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்