TNPSC Thervupettagam

தேசிய நுகர்வோர் உரிமை தினம் - டிசம்பர் 24

December 25 , 2019 1740 days 1679 0
  • 1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற தினமே இத்தினமாகும்.
  • 2019 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் “நுகர்வோர் எதிர்கொள்ளும் குறைகள் / பிரச்சனைகளுக்கான மாற்று நிவாரணம் அளித்தல்”.
  • 1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகளானவை இந்திய அரசியலமைப்பின் சரத்து 14 முதல் 19 வரை குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளிலிருந்துப் பெறப்பட்டவை ஆகும்.
  • தேசிய நுகர்வோர் உதவி மைய எண் 1800 -11 - 4000 அல்லது 14404.
  • உலக நுகர்வோர் உரிமைகள் தினமானது மார்ச் 15 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தச் சட்டத்தின் கீழ் பின்வரும் ஆறு நுகர்வோர் உரிமைகளை நுகர்வோர் கொண்டுள்ளனர்:
    • பாதுகாப்புக்கான உரிமை
    • தகவல் அறியும் உரிமை
    • தேர்ந்தெடுக்கும் உரிமை
    • கேட்கும் உரிமை
    • நிவாரணம் பெறும் உரிமை
    • நுகர்வோர் கல்விக்கான உரிமை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்