சுயமாக திறன் பயிற்சிகளை கற்று தேர்ந்த பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கப் பொறியாளர், உணவைப் பாதுகாப்பான முறையில் வேகமாகச் சூடாக்குவதற்காக நுண்ணலைகளை வெகுவாகப் பயன்படுத்தும் ஒரு முறையை 1945 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.
நெருப்பில் கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களைப் பயன்படுத்தும் பாரம்பரிய சமையல் முறையைப் போலல்லாமல், இந்த நுண்ணலை கனலடுப்புகள் மின்காந்தக் கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்றன.
1945 ஆம் ஆண்டு அக்டோபர் 08 ஆம் தேதியன்று ரெய்தியோன் நிறுவனத்தினால் இதற்கான காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டு முதல் நுண்ணலை கனலடுப்புகளுக்கு “ராடராஞ்” என்று பெயரிடப்பட்டது.