TNPSC Thervupettagam

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர்

July 9 , 2018 2233 days 3287 0
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு (Appointments Committee of Cabinet) நீதிபதி A.K.கோயலை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT - National Green Tribunal) புதிய தலைவராக நியமித்துள்ளது.
  • இவர் பதவி ஏற்றதிலிருந்து 5 வருடங்கள் அல்லது 70 வயதினை அடையும் வரை இவற்றில் எது முந்தையதாக உள்ளதோ அதுவரை அப்பதவியில் இருப்பார்.
  • A.K.கோயல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இப்பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.
  • தேசிய பசுமை தீர்ப்பாயச் சட்டம், 2010-ன் கீழ் 2010-ம் ஆண்டு NGT நிறுவப்பட்டது.
    • தண்ணீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு) சட்டம் 1974
    • காற்று (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு) சட்டம் 1974
    • சுற்றுச் சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986
    • பொதுமக்கள் கடன் காப்பீட்டு சட்டம், 1991
    • வனப்பாதுகாப்புச் சட்டம், 1980 மற்றும்
    • பல்லுயிர்பெருக்கச் சட்டம், 2002

ஆகியவை தொடர்பான விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வழக்குகளில் இது  தீர்ப்பளிக்கும்.

  • இது முழுநேரத் தலைவர் (உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி (அ) உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி), நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்