இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (National Panchayati Raj Diwas) கொண்டாடப்படுகின்றது.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 1992 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 73வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் சட்டம் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததை குறிப்பதற்காக கொண்டாடப்படுகின்றது.
முதல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் வரலாற்றில் ஓர் முக்கியமான அதிகாரப் பகிர்வு தருணத்தை (Power devolution moment) 73-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம் உண்டாக்கியது.
வேர் நிலை அளவில் அரசியல் அதிகாரத்தின் பரவலாக்கலுக்கு (decentralization of political power) இத்திருத்தச் சட்டம் உதவியது.