பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் தேசிய பாதுகாப்பு குழுவால் (National Safety Council of India-NSC) மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day) கொண்டாடப்படுகின்றது.
இவ்வாண்டு 47வது தேசியப் பாதுகாப்புத் தினம் கொண்டாடப்பட்டது.
தேசியப் பாதுகாப்பு குழுவின் நிறுவன தினத்தை (மார்ச் 4) கொண்டாடுவதற்காக, முதல் தேசியப் பாதுகாப்புத் தினப் பிரச்சாரம் 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
பொது சேவைக்கான இலாப நோக்கமற்ற அரசு சாரா நிறுவனமான தேசியப் பாதுகாப்புக் குழுவானது சுய நிர்வகிப்புடைய அமைப்பாக 1966ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி சங்கங்கள் சட்டத்தின் (Societies Act) கீழ் மும்பையில் தொடங்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2018ஆம் ஆண்டு மார்ச் 4 முதல் மார்ச் 10 வரை தேசியப் பாதுகாப்பு வாரத்தை (National Security Week – NSC) கொண்டாட உள்ளது.