இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியனின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நவம்பர் 26 ஆம் தேதியன்று தேசிய பால் தினம் கொண்டாடப் பட்டது.
2014 ஆம் ஆண்டில், நாட்டில் உள்ள அனைத்து பால் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இந்திய பால் சங்கம் ஆகியவை டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த தினத்தை (நவம்பர் 26) தேசிய பால் தினமாக கடைபிடிக்க முடிவு செய்தன.
உலகின் மிகப்பெரிய வேளாண் பால் மேம்பாட்டுத் திட்டமான “பால் பெருக்குத் திட்டத்தை” (Operation Flood) தலைமையேற்று நடத்திய ஒரு சமூக தொழில்முனைவோர் இவராவார்.
இவர் 1973 முதல் 2006 வரை குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பில் (Gujarat Cooperative Milk Marketing Federation - GCMMF) பணியாற்றினார்.
அதன் உற்பத்திப் பொருளே அமுல் ஆகும் (ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம்/Anand Milk union Limited).
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் நாடாக இந்தியா (உலகின் மொத்த பால் உற்பத்தியில் 22% அல்லது ஒரு ஆண்டிற்கு 187.7 மில்லியன் டன்) விளங்குகின்றது.
இந்தியாவின் பால் உற்பத்தியானது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பால் உற்பத்தியை விடவும் அதிகமாக உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன.