TNPSC Thervupettagam

தேசிய பால் தினம் - நவம்பர் 26

November 27 , 2020 1373 days 389 0
  • இந்தியாவில் டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 26 அன்று தேசிய பால் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • அவர் இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அறியப்படுகிறார்.
  • பால் மற்றும் பால் தொழில் தொடர்பான நன்மைகளை ஊக்குவிப்பதற்கும், பால் மற்றும் பால் பொருட்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • முதல் தேசிய பால் தினமானது 2014  ஆம் ஆண்டு 26 நவம்பர் அன்று கொண்டாடப் பட்டது.
  • ஆனால் உலக பால் தினமானது ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் ஜூன் 1 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்