தேசிய பால் தினம் (NMD - National Milk Day) ஆனது நவம்பர் 26 அன்று இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தையான டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை குறிப்பதற்காக அனுசரிக்கப்படுகிறது. அவர் கோழிக்கோட்டில் 1921ஆம் ஆண்டு பிறந்தார்.
முதல் பால் தினமானது 26 நவம்பர் 2014 அன்று அனுசரிக்கப்பட்டது.
1970-ல் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தால் (NDDB - National Dairy Development Board) தொடங்கப்பட்ட “வெண்மைப் புரட்சியின்” வடிவமைப்பாளர் டாக்டர் குரியன் ஆவார்.
இந்த திட்டமானது இந்தியாவை மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றுவதற்கு வழி வகுத்தது. தற்போது இந்தியா தனது பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெற்றுள்ளது.