குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை 15 செவிலிய நிபுணர்களுக்கு வழங்கினார்.
இந்த விருதானது இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினால் 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
செவிலியர்கள் மற்றும் செவிலிய தொழில்முறை வல்லுநர்கள் சமுதாயத்திற்குச் செய்யும் மகத்தான சேவைகளுக்கான அங்கீகாரத்தை வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.
மத்திய, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணி புரிகின்றச் சிறப்பானப் பணியாற்றும் செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.