TNPSC Thervupettagam

தேசிய புள்ளியியல் நாள் - ஜூன் 29

June 30 , 2022 788 days 286 0
  • மஹாலனோபிஸ் அவர்களுடையப் பிறந்தநாளை இந்திய அரசு கொண்டாடுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'ஒரு நிலையான மேம்பாட்டிற்கானத் தரவு' என்பதாகும்.
  • ந்தத் தினமானது முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
  • சமூக-பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் புள்ளி விவரங்களின் பங்கு குறித்து இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.
  • பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹாலனோபிஸ் இந்தியப் புள்ளியியல் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • தற்போது மஹாலனோபிஸ் தொலைவு என அழைக்கப்படும் இரண்டு தரவுத் தொகுப்புகளுக்கு இடையேயான ஒப்பீட்டு அளவை வகுத்தவர் இவரே ஆவார்.
  • இவர் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்காக இரண்டு துறைகளுக்கான உள்ளீட்டு-வெளியீட்டு மாதிரியை வழங்கினார்.
  • இது பின்னர் நேரு-மஹாலனோபிஸ் மாதிரி என அறியப்பட்டது.
  • இவர் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், கொல்கத்தா நகரில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை (ISI) நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்