TNPSC Thervupettagam

தேசிய பொறியாளர்கள் தினம் – செப்டம்பர் 15

September 16 , 2020 1445 days 540 0
  • இந்தத் தினமானது இந்தியாவின் சிறந்த பொறியாளரான மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரய்யா அல்லது M. விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த நாள் நினைவாகவும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அனுசரிக்கப் படுகின்றது.
  • இவர் இந்தியாவின் சிறந்த பொறியாளர், அணை கட்டமைப்பாளர், பொருளாதார வல்லுநர், சிறந்த தலைவர் ஆவார். மேலும் இவர் கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த தேசக் கட்டமைப்பாளர்களில் ஒருவராகவும் மதிப்பிடப் படுகின்றார்.
  • மேலும் இவர் 1912 முதல் 1918 வரை மைசூரின் திவானாகவும் விளங்கினார்.
  • இவர் மைசூரில் உள்ள கிருஷ்ணா ராஜ சாகர் அணையின் கட்டுமானத்திற்குப் பொறுப்பு வகித்த தலைமைப் பொறியாளராக விளங்கினார்.
  • மேலும் இவர் ஹைதராபாத் நகரத்திற்கான வெள்ளப் பாதுகாப்பு அமைப்பின்  தலைமை வடிவமைப்பாளராகவும் விளங்கினார்.
  • இவர் 1903 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள கடக்வாஸ்லா நீர்த்தேக்கத்தில் முதன்முதலில் அமைக்கப்பட்ட ஒரு தானியங்கி வெள்ளத் தடுப்பு வாயில்களை வடிவமைத்து அதற்கான காப்புரிமையைப் பெற்றார்.
  • மேலும் இவர் மைசூர் மாகாணத்தை அப்போதைய ஒரு மாதிரி மாகாணமாகமாற்றினார்.
  • சமூகத்திற்கு இவருடைய தலைசிறந்த பங்களிப்பின் காரணமாக, இந்திய அரசு இவருக்கு 1955 ஆம் ஆண்டில்பாரத் ரத்னாவிருதினை வழங்கியது.
  • மேலும் இவருக்கு ஐந்தாம் ஜார்ஜ் அரசரினால் பிரிட்டீஷ் நைட்வுட் பட்டமும் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்