TNPSC Thervupettagam

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்கள்

October 6 , 2023 289 days 401 0
  • 2023-24 ஆம் கல்வியாண்டிற்குப் பிறகு, 50, I00 மற்றும் 150 என்ற வருடாந்திர உட்சேர்க்கை இடங்களின் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான அனுமதி வழங்கப்படும்.
  • ஒரு மாநிலம்/ ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு 100 இளநிலை மருத்துவப் படிப்பு (MBBS) இடங்கள் என்ற விகிதத்தை அந்த மருத்துவக் கல்லூரி பின்பற்ற வேண்டும்.
  • தேசிய மருத்துவ ஆணையமானது இந்த வழிகாட்டுதல்களை (NMC) இந்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது.
  • பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த எண்ணிக்கை 60, 120, 180 இடங்கள் ஆகும்.
  • இடங்களை அதிகரிக்க விரும்பும் கல்லூரிகள் 2024-25 ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 150 MBBS மாணவர் எண்ணிக்கையினைத் தாண்டக் கூடாது.
  • 70 இளங்கலை மருத்துவக் கல்லூரிகளில் 10,000க்கும் மேற்பட்ட இடங்கள் இருப்பதால், எட்டு கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் அதிக இடங்களைச் சேர்க்க முடியாது என்று புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
  • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்ச MBBS இடங்கள் உள்ளன.
  • மாநிலம் முழுவதும் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 35 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 72 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
  • இந்திய மருத்துவச் சபையின் தரவுகளின் படி, இந்தியாவின் எட்டு மருத்துவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
  • தமிழக மாநிலத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார்.
  • இந்த விகிதம் ஆனது ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கு இணையாகவும், உலக சுகாதார அமைப்பினால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை விட அதிகமாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்