இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (NMC), உலக மருத்துவக் கல்விக் கூட்டமைப்பின் (WFME) அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
இந்த அந்தஸ்து 10 வருட காலத்திற்குச் செல்லுபடியாகும்.
இந்த அங்கீகாரமானது இந்திய மருத்துவப் பட்டதாரிகளுக்கு WFME அங்கீகாரம் தேவைப் படும் பிற நாடுகளில் முதுகலைப் பயிற்சி மற்றும் மருத்துவப் பயிற்சியைத் தொடர உதவும்.
தற்போதுள்ள அனைத்து 706 மருத்துவக் கல்லூரிகளும் WFME அங்கீகாரம் பெற்றதாகவும், அடுத்து வரும் 10 ஆண்டுகளில் அமைக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தானாகவே WFME அங்கீகாரம் பெற்றதாகவும் கொள்ளப்படும்.
உலக மருத்துவக் கல்விக் கூட்டமைப்பு (WFME) என்பது உலகளாவிய மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய அமைப்பாகும்.