போபால் விஷவாயு விபத்தில் உயிர் இழந்தவர்களை இந்த நாள் நினைவு கூர்கிறது.
மாசுபாடு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அது நம் தினசரி அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மாசுபாடு என்பது உலகம் முழுவதும் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளதோடு, காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.
போபால் விஷ வாயு விபத்து ஆனது 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதியன்று நடைபெற்றது.
நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசையனேட் (MIC) வாயு கசிந்து அது உடன் வளி மண்டலத்தில் வேகமாக பரவிய பிறகு அது சுமார் 15,00 முதல் 20,000 உயிர்களைப் பலி வாங்கியது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Clean Air, Green Earth: A Step Towards Sustainable Living" என்பதாகும்.