TNPSC Thervupettagam

தேசிய மாசுக் கட்டுப்பாட்டுத் தினம் – டிசம்பர் 02

December 3 , 2021 998 days 400 0
  • போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தியாவில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் சட்டங்கள் உள்ளது பற்றி குடிமக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 மற்றும் 03  ஆகிய தினங்களில் போபால் விஷவாயு விபத்து நிகழ்ந்தது.
  • இந்த விபத்தின் போது, போபாலில் உள்ள யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் என்ற பூச்சிக் கொல்லி மருந்து ஆலையிலிருந்து மெத்தில் ஐசோசைனேட் (methyl isocyanate) என்ற விஷத்தன்மையுள்ள ரசாயனம் கசிந்தது.
  • இது உலகின் மகப்பெரிய தொழில்துறை சார்ந்த பேரழிவாகக் கருதப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்