தொழில்துறை நடவடிக்கைகள் அல்லது மனித அலட்சியம் ஆகியவற்றால் ஏற்படுத்தப்படும் மாசுக்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
1984 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவு கூரும் வகையில் இந்தத் தினம் அனுசரிக்கப் படுகின்றது.
2019 ஆம் ஆண்டானது போபால் விஷவாயு விபத்தின் 35வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது.