தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் 2023 – டிசம்பர் 02
December 2 , 2023 360 days 163 0
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 02 ஆம் தேதியானது தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினமாக அனுசரிக்கப் படுகிறது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 மற்றும் டிசம்பர் 03 ஆம் தேதிகளில், மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் என்ற பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில் இருந்து சில இரசாயனங்களோடு சேர்த்து மெத்தில் ஐசோசயனேட் என்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனம் வெளியானது.
மத்தியப் பிரதேச மாநில அரசானது, தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் வெளிப்பாட்டால் 25000 பேர் இறந்ததாக அறிவித்தது.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினத்திற்கான கருத்துரு, “தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கிரகத்திற்கான நிலையான மேம்பாடு” என்பதாகும்.