TNPSC Thervupettagam

தேசிய மின்சாரத் திட்டம்

June 13 , 2023 404 days 260 0
  • மத்திய மின்சார ஆணையமானது (CEA) ‘தேசிய மின்சாரத் திட்டம் தொகுதி-I: உற்பத்தி’ என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள லிக்னைட் இருப்பான 40.9 பில்லியன் டன் என்ற அளவில் சுமார் 82 சதவீதத்தினைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
  • தமிழகத்தில் 33,309.53 மில்லியன் டன்கள் லிக்னைட் இருப்பு உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 4,835.29 மில்லியன் டன்களும், குஜராத்தில் 2,722.05 மில்லியன் டன்களும் உள்ளன.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் 25.55 மில்லியன் டன்கள் லிக்னைட் இருப்பு உள்ளன.
  • கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஒரு சேர 11.44 மில்லியன் டன்கள் லிக்னைட் இருப்பு உள்ளன.
  • தேசிய மின்சாரத் திட்டமானது 2022-27 ஆகிய காலகட்டத்திற்கான ஒரு விரிவானத் திட்டத்தினையும் 2027-32 காலகட்டத்திற்கான ஒரு தொலைநோக்குத் திட்டத்தினையும் உள்ளடக்கியது.
  • இது 2026-27 ஆம் ஆண்டில் 28.74 பில்லியன் அலகு என்ற அளவில் மொத்த லிக்னைட் சார்ந்தப் பொருட்களின் உற்பத்தியும், 2031-32 ஆம் ஆண்டில் 28.18 பில்லியன் அலகு உற்பத்தியும் பதிவாகும் என்று கணித்துள்ளது.
  • 2026-27 ஆம் ஆண்டில் தமிழகத்தின் உச்சகட்ட மின் தேவை 21,736 மெகாவாட்டாகவும், 2031-32 ஆம் ஆண்டில் 28,291 மெகாவாட்டாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்