TNPSC Thervupettagam

தேசிய மீன்வளர்ப்பு விவசாயிகள் தினம் – ஜூலை 10

July 13 , 2021 1143 days 362 0
  • இந்த தினமானது ஒவ்வோர் ஆண்டும் தேசிய மீன்வளத்துறை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தினால் கடைபிடிக்கப் படுகிறது.
  • நிலையான வள இருப்புகள் மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலைகள் போன்றவற்றை உறுதி செய்வதற்காக மீன்வளங்களை மேலாண்மை செய்யும் முறையை மாற்றுவதற்கான கவனத்தை ஈர்ப்பதையே இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த தினமானது டாக்டர் K.H. அலிகுன்ஹி மற்றும் டாக்டர் H.L. சௌத்ரி ஆகிய அறிவியலாளர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்படுகிறது.
  • இவர்கள் 1957 ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று இந்தியாவின் முதன்மை மீன் வகை இனங்களின் தூண்டப்பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்பத்தை (induced breeding technology) கண்டுபிடித்தனர்.
  • 2021 ஆம் ஆண்டானது 21வது தேசிய மீன் வளர்ப்பு விவசாயிகள் தினத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்