இந்தியா முழுவதும் உள்ள மீன் பண்ணையாளர்கள், மீனவர்கள் மற்றும் அத்துறை தொடர்பான பங்குதாரர்கள் மத்தியிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்திய மீன்வளத்துறையில், பேராசிரியர் டாக்டர் ஹீராலால் சௌத்ரி மற்றும் அவரது சக ஊழியர் டாக்டர் K. H. அலிகுன்ஹி ஆகியோர் ஆற்றியப் பங்களிப்பை நன்கு கௌரவிப்பதற்காகவும் அவர்களை நினைவு கூறுவதற்காகவும் வேண்டி இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
1957 ஆம் ஆண்டு இந்த நாளில், இந்தியக் கெண்டை மீன் இனங்களில் தூண்டுமுறை இனப்பெருக்கத் தொழில்நுட்பத்தின் மூலம் தூண்டப்பட்ட இனப்பெருக்கச் செயல் முறையினை அவர்கள் தலைமையேற்று மேற்கொண்டனர்.
இது உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஒரு உற்பத்திப் புரட்சிக்கு வழி வகுத்தது.