அபராத வழக்குகள் ஆனது தேசிய முகமில்லாத் தண்டனை மையத்திற்கு ஒதுக்கப் படுவதாகவும், முகமில்லா அபராதத் திட்டத்தின் கீழ் அவை 2021 ஆம் ஆண்டின் தேசிய முகமில்லா மதிப்பீட்டு மையத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய நேர்முக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
அனைத்து அபராத வழக்குகளும் வருமான வரிச் சட்டம், 1961 என்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கத் தொடங்கப்பட்டன.
வரி செலுத்தத் தவறுவோருக்கு அபராதம் விதிப்பதற்காக வேண்டி ஒருசார்பற்ற மற்றும் வெளிப்படையான இணையவழி முகமில்லா முறையை இது கொண்டிருக்கும்.