TNPSC Thervupettagam

தேசிய யுனானி தினம்

February 11 , 2018 2420 days 654 0
  • ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி, மிகச் சிறந்த யுனானி ஆய்வாளரான ஹக்கிம் அஜ்மல்கானின் பிறந்த தினத்தை குறிப்பிடும் வகையில் தேசிய யுனானி தினம் கொண்டாடப்படுகின்றது.
  • சிறந்த கல்வியாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஹக்கிம் அஜ்மல் கான் சிறந்த இந்திய யுனானி மருத்துவரும், யுனானி மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சிக்கான அடித்தளமிட்டவரும் ஆவார்.
  • மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள யுனானி மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி மையம், தேசிய யுனானி தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச யுனானி மருத்துவத்திற்கான மாநாடு என்று இரண்டு நாள் கருத்தரங்கை நடத்துகின்றது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு - பிரதான சுகாதார முறையுடன் யுனானி மருத்துவ முறையை ஒருங்கிணைத்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்