TNPSC Thervupettagam

தேசிய யுனானி தினம் – பிப்ரவரி 11

February 16 , 2019 2051 days 508 0
  • இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 11-ம் தேதி தேசிய யுனானி தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • ஒரு தலைசிறந்த இந்திய யுனானி மருத்துவராக அவர் அளித்த பங்களிப்புகளுக்கு ஒரு அங்கீகாரமாக ஹாகிம் அஜ்மல் கானின் பிறந்த தினமான பிப்ரவரி 11-ம் தேதி, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் (Ministry of AYUSH) யுனானி தினமாக 2016 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் யுனானி தினத்தை நினைவில் வைத்திட பொது சுகாதாரத்திற்கான யுனானி மருத்துவத்தின் மீது தேசிய மாநாடு என்ற இரண்டு நாள் அமர்வு புதுதில்லியில் நடத்தப்பட்டது.
  • மத்திய ஆயுஷ் அமைச்சகம் யுனானி மருத்துவத்திற்கான ஆயுஷ் விருதுகள் என்ற திட்டத்தையும் ஏற்படுத்தியது. இத்திட்டம் ஒவ்வொரு வருடத்திலும் 12 விருதுகளை பின்வரும் பிரிவுகளில் அளித்திடுவதற்கான விதிகளைக் கொண்டிருக்கின்றது.
    • சிறந்த ஆராய்ச்சியாளர் அறிக்கை விருது
    • இளம் அறிவியலாளர் விருது
    • சிறந்த ஆசிரியர் விருது
    • வாழ்நாள் சாதனை விருது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்