TNPSC Thervupettagam

தேசிய வனத் தியாகிகள் தினம் – 11 செப்டம்பர்

September 10 , 2021 1083 days 333 0
  • 1730 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த கெஜார்லி படுகொலையின் நினைவாக இது அனுசரிக்கப் படுகிறது.
  • ராஜஸ்தானில் மகாராஜா அபய் சிங் ஆட்சியின் போது, கெஜார்லி மரங்களை வெட்ட உத்தரவிடப் பட்டது.
  • அச்சமயம் அமிர்தா தேவி என்பவரின் தலைமையில் 360க்கும் மேற்பட்ட பிஷ்னாய் பழங்குடியினர் வனத்திலுள்ள மரங்களை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • 2013 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகமானது இந்த நாளை அனுசரிக்க அதிகாரப் பூர்வமான அறிவிப்பினை அறிவித்தது.
  • மேலும், சிப்கோ இயக்கமானது பிஷ்னோய் சமூகத்தின் இந்த துணிச்சலான செயலால் ஊக்குவிப் பட்டது.
  • சிப்கோ இயக்கம் 1973 ஆம் ஆண்டில் உத்தரகாண்டின் இமயமலைப் பகுதியில் (அப்போதைய உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதி) துவங்கப்பட்டது.
  • காந்தியச் சமூக ஆர்வலர் சாந்தி பிரசாத் பட் அவர்கள் மண்டல் கிராமத்தில் முதல் சிப்கோ இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார்.
  • பின்னர் இந்த இயக்கம் சுற்றுச்சூழல் ஆர்வலரான சுந்தர் லால் பகுகுணாவின் கீழ் ஈர்ப்பைப் பெற்றது.
  • "சூழலியல் என்பது நிரந்தரப் பொருளாதாரம்" என்ற ஒரு முழக்கத்திற்காக பகுகுணா சிறப்பாக நினைவு கூறப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்