2017-18 ஆம் ஆண்டிற்கான தேசிய வருடாந்திர ஊரகத் தூய்மைக் கணக்கெடுப்பின் படி (National Annual Rural Sanitation Survey - NARSS), கிராமப்புறங்களில் கழிப்பறைகளுக்கு அணுகுதலைக் கொண்டுள்ள (have access to toilets) 93 சதவீத வீடுகள் கழிவறைகளைப் பயன்படுத்துகின்றன. ஊரகப் பகுதிகளில் 77 சதவீத வீடுகள் கழிவறைகளைக் கொண்டுள்ளன.
ஊரகப் பகுதிக்கான தூய்மை இந்தியா திட்டத்திற்கான (Swachh Bharat Mission Gramin - SBM-G) உலக வங்கியின் ஆதரவுத் திட்டத்தின் கீழ் (World Bank support project) Independent Verification Agency எனும் நிறுவனத்தால் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
2017 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் நாடு முழுவதும் 6,136 கிராமங்களில் உள்ள 92,040 வீடுகளில் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பில் அளவுக்கான நிகழ்தகவு விகிதம் எனும் (PPS-Probability proportion to Size) மாதிரி முறைமை (sampling methodology) பயன்படுத்தப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பின் தரவுகளானது, கணிணி உதவியுடைய தனிப்பட்ட நேர்காணல் (Computer Assisted Personal Interviewing - CAPI) எனும் இணையமேடையின் பயன்பாட்டின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.