TNPSC Thervupettagam

தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள்

January 11 , 2023 555 days 320 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) ஆனது 2022-23 ஆம் நிதியாண்டிற்கான தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டது.
  • 2021-22 ஆம் ஆண்டில் 8.7 சதவீதமாக பதிவான இந்தியாவின் நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2022-23 ஆம் ஆண்டில் 7 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் 19.7 சதவீதமாக பதிவான இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2022-23 ஆம் ஆண்டில் 15.4 சதவீதமாக மதிப்பிடப் பட்டு உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் பதிவான நிலையான (2011-12) அல்லது மாறா விலைமதிப்பு அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 157.60 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான தற்காலிக மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 147.36 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்