இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் கோளாறு - வலிப்பு நோய்- பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அறிவியல்பூர்வ புரிதல் மற்றும் அனுதாபத்தினை ஊக்குவிக்கும் அதே வேளையில் வலிப்பு நோய் தொடர்புடைய தவறான கருத்துக்கள் மற்றும் தவறான எண்ணங்களை அகற்றுவதை இந்த நாள் வலியுறுத்துகிறது.
உலகளவில், வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊதா தினம் (மார்ச் 26) கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியன் மக்கள் இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.