இந்திய தேர்தல் ஆணையத்தால் 8-வது தேசிய வாக்காளர்கள் தினம் (National Voters Day) நாடு முழுவதும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கங்கள்
நாட்டு மக்கள் அனைவரும் செம்மையான முறையில் தேர்தல் செயல்பாடுகளில் பங்கெடுப்பது தொடர்பாக நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
நாட்டில் வயதுவந்தோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதை அதிகரித்தல்.
1950-ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. அன்று முதல் மகத்தான முறையில் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக 2011ஆம் ஆண்டு தேசிய வாக்காளர்கள் தினம் நிறுவப்பட்டது.