இந்தத் தின அனுசரிப்பின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், குறிப்பாக புதிய வாக்காளர்களை ஊக்குவிப்பதும், அவர்களின் சேவைகளை எளிதாக்கச் செய்வதும், வாக்காளர் சேர்க்கையை அதிகப்படுத்துவதும் ஆகும்.
2011 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாள் 1950 ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் உருவான தினத்தைக் குறிக்கிறது.
இந்த ஆண்டுக்கான கருபொருள், ‘வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன்’ என்பதாகும்.