கேரளாவின் திருவனந்தப்புரத்திலுள்ள கள்ளியூரில் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 தேதி வரை தேசிய வாழைப்பழ திருவிழா நடத்தப்பட்டது.
நாட்டில் உள்ள பல்வேறு வாழைப்பழ வகைகளை காட்சிப்படுத்துவதற்காகவும் வாழைப்பழம் மற்றும் வாழை மரத்தினுடைய பிற பகுதிகளின் பலதரப்பட்ட பயன்களைக் காட்சிப்படுத்துவதற்காகவும் இந்தத் திருவிழா நடத்தப்படுகின்றது.
தேசிய வாழைப்பழத் திருவிழாவின் கருப்பொருள் “பல்வகைமையைப் பாதுகாத்தல், அதன் அடையாளத்தை பராமரித்தல், மதிப்புக் கூட்டலை மேம்படுத்துதல் (Conserving Diversity, Preserving identity and promoting value addition) ஆகியனவாகும்.
கள்ளியூர் கிராம பஞ்சாயத்துடன் இணைந்து அறிவியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் புதுமைக்கான மையம் (Centre for innovation in Science & Social Action) இத்திருவிழாவை ஒருங்கிணைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய வாழைப்பழ உற்பத்தியாளர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.